காங்கிரஸ் செய்தி தொடர்பாளர்களாக மேலும் 10 பேர் நியமனம்


காங்கிரஸ் செய்தி தொடர்பாளர்களாக மேலும் 10 பேர் நியமனம்
x
தினத்தந்தி 1 Jan 2019 4:31 PM IST (Updated: 1 Jan 2019 4:31 PM IST)
t-max-icont-min-icon

காங்கிரஸ் செய்தி தொடர்பாளர்களாக புதிதாக பத்து பேரை அந்த கட்சியின் தலைவர் ராகுல் காந்தி நியமனம் செய்தார்.

புதுடெல்லி,

காங்கிரஸ் செய்தி தொடர்பாளர்களாக புதிதாக பத்து பேரை அந்த கட்சியின் தலைவர் ராகுல் காந்தி நியமித்து உத்தரவிட்டு உள்ளார்.

காங்கிரஸ் கட்சிக்கு ஏற்கனவே மூத்த செய்தி தொடர்பாளர்களாக 9 பேரும், செய்தி தொடர்பாளர்களாக 26 பேரும் உள்ளனர். இந்நிலையில் காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி மேலும் 10 பேரை செய்தி தொடர்பாளர்களாக நியமித்துள்ளார். 

மாநிலங்களவை உறுப்பினர் சையது நசீர் ஹுசைன், பவன் கேரா, ஜெய்வீர் செர்கில், ராகினி நாயக், கவுரவ் வல்லப், ராஜீவ் தியாகி, அகிலேஷ் பிரதாப் சிங், சுனில் அகிரே, சட்டமன்ற உறுப்பினர் ஹீனா கவாரே, சிரவண் தசோஜு ஆகியோர் செய்தி தொடர்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். 

Next Story