சபரிமலை ஐயப்பன் கோவிலில் 2 பெண்கள் தரிசனம் செய்தனர்


சபரிமலை ஐயப்பன் கோவிலில் 2 பெண்கள் தரிசனம் செய்தனர்
x
தினத்தந்தி 2 Jan 2019 10:01 AM IST (Updated: 2 Jan 2019 10:46 AM IST)
t-max-icont-min-icon

சபரிமலை ஐயப்பன் கோவிலில் 2 பெண்கள் தரிசனம் செய்தனர் என தகவல் வெளியாகி உள்ளது.

திருவனந்தபுரம்,

கேரளாவில் உள்ள உலகப் பிரசித்திபெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் 10 வயதிற்கும் குறைவான சிறுமிகளும், 50 வயதிற்கும் அதிகமான பெண்களும் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வந்தனர்.

இந்த நிலையில், 10 முதல் 50 வயது வரை உள்ள பெண்களுக்கு சபரிமலை கோவிலுக்குள் அனுமதிக்க கோரி தொடுக்கப்பட்ட வழக்கில் கடந்த வருடம் செப்டம்பரில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வழங்கியது.  இதில் 10 முதல் 50 வயது வரை உள்ள பெண்களுக்கு கோவிலுக்கு செல்ல அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்த தீர்ப்புக்கு எதிராக இந்து மத அமைப்புகளும் மற்றும் பல்வேறு அமைப்பினரும் போராட்டங்களில் ஈடுபட்டனர்.  இந்த நிலையில், சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் செல்ல மனிதி அமைப்பினை சேர்ந்த 11 பெண்கள் முற்பட்டனர்.  ஆனால் பக்தர்களின் எதிர்ப்பினால் அவர்கள் பம்பையில் தடுத்து நிறுத்தப்பட்டனர்.  சாமி தரிசனம் செய்யாமல் திரும்பி சென்றனர்.

இந்த நிலையில், சபரிமலை ஐயப்பன் கோவில் சன்னிதானத்தில் 50 வயதுக்கு கீழ் உள்ள இரு பெண்கள் 18 படிகள் ஏறாமல் வேறு வழியாக சென்று அதிகாலை 3.45 மணியளவில் தரிசனம் செய்துள்ளனர் என தகவல் வெளியாகி உள்ளது.

அவர்களில் ஒருவர் இந்திய கம்யூனிஸ்டு (எம்.எல்.) அமைப்பினை சேர்ந்த பிந்து (வயது 42) என்றும் மற்றொருவர் கனகதுர்கா (வயது 44) என்றும் தெரிய வந்துள்ளது.

Next Story