2018-ல் மத்திய அரசு ஊழியர்களுக்கு எதிராக சிபிஐ 206 ஊழல் வழக்குகளை பதிவு செய்துள்ளது


2018-ல் மத்திய அரசு ஊழியர்களுக்கு எதிராக சிபிஐ 206 ஊழல் வழக்குகளை பதிவு செய்துள்ளது
x
தினத்தந்தி 2 Jan 2019 2:45 PM IST (Updated: 2 Jan 2019 3:11 PM IST)
t-max-icont-min-icon

2018-ல் மத்திய அரசு ஊழியர்களுக்கு எதிராக சிபிஐ 206 ஊழல் வழக்குகளை பதிவு செய்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

2018-ம் ஆண்டில் ஜனவரி முதல் நவம்பர் வரையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு எதிராக 206 ஊழல் வழக்குகளை சிபிஐ பதிவு செய்துள்ளது. இதில் 45 வழக்குகளில் சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது என மத்திய அரசு தரப்பில் மக்களவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிபிஐ,  2017-ம் ஆண்டு 338 வழக்குகள் பதிவு செய்தது. 2016-ம் ஆண்டு 400 வழக்குகளையும்,  2015-ம் ஆண்டு 441 வழக்குகளையும் சிபிஐ பதிவு செய்துள்ளது. இதில் 2017-ம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் 168 வழக்குகளில் சிபிஐ குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்துள்ளது. 2016-ல் 272 வழக்குகளிலும், 2015-ம் ஆண்டு 361 வழக்குகளிலும் சிபிஐ குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்துள்ளது என மத்திய அமைச்சர் ஜிஜேந்திர சிங் கூறியுள்ளார்.  23 வழக்குகளில் 17 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு எதிராக வழக்கு தொடர  மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story