ஜம்மு காஷ்மீரில் 6 மாதங்களில் 140 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை - மத்திய அரசு


ஜம்மு காஷ்மீரில் 6 மாதங்களில் 140 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை - மத்திய அரசு
x
தினத்தந்தி 2 Jan 2019 2:53 PM IST (Updated: 2 Jan 2019 2:53 PM IST)
t-max-icont-min-icon

ஜம்மு காஷ்மீரில் 6 மாதங்களில் 140 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

ஜம்மு காஷ்மீரில் 6 மாதங்களில் 140 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஜூன் 25-ம் தேதி முதல் டிசம்பர் 5-ம் தேதி வரையில் மாநிலத்தில் 19 பயங்கரவாத வன்முறை சம்பவங்கள் நடைபெற்றுள்ளது. இதே கால கட்டங்களில் மாநிலத்தில் 426 கல்வீச்சு சம்பவங்கள் நடைபெற்றுள்ளது. இதில் 34 பேர் காயம் அடைந்துள்ளனர்.  2016-ம் ஆண்டு காஷ்மீர் மற்றும் இந்தியாவின் பிற பகுதிகளில் பயங்கரவாதிகள் உடனான சண்டை மற்றும் எல்லைப் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த  171 ராணுவ வீரர்கள் உயிர் தியாகம் செய்துள்ளனர்.  2017-ம் ஆண்டு 167 வீரர்களும், 2018-ம் ஆண்டு 163 வீரர்களும் வீரமரணம் அடைந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story