உண்மைகளை திரிக்கும் காங்கிரசின் தீவிர முயற்சி: ஆடியோ குறித்து மனோகர் பாரிக்கர் விளக்கம்


உண்மைகளை திரிக்கும் காங்கிரசின் தீவிர முயற்சி: ஆடியோ குறித்து மனோகர் பாரிக்கர் விளக்கம்
x
தினத்தந்தி 2 Jan 2019 3:27 PM IST (Updated: 2 Jan 2019 4:22 PM IST)
t-max-icont-min-icon

ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக காங்கிரஸ் வெளியிட்ட ஆடியோவிற்கு மனோகர் பாரிக்கர் விளக்கம் தெரிவித்துள்ளார்.

பானஜி,

ரபேல் விமான ஒப்பந்தம் தொடர்பான ஆவணங்கள் தனது படுக்கை அறையில் இருப்பதாக முன்னாள் பாதுகாப்புத்துறை அமைச்சரும் தற்போதைய கோவா மாநில முதல் மந்திரியுமான மனோகர் பாரிக்கர் கூறியதாக இன்று காங்கிரஸ் குற்றம் சாட்டியது. செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா, இன்று காலை பாராளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்கள் முன்னிலையில் ஆடியோ ஒன்றை ஒலிபரப்பினார்.  

அதில், கோவா சுகாதாரத்துறை மந்திரி  விஷ்வஜித் ரானே மற்றொரு நபரிடம் இது குறித்து பேசுவது  இடம் பெற்றுள்ளதாகவும் சுர்ஜேவாலா தெரிவித்தார்.  இந்த விவகாரம் பெரிய புயலை கிளப்பிய நிலையில், காங்கிரஸ் கூறுவது போல கேபினட் கூட்டத்தின் போது எந்த ஒரு உரையாடலும் நடைபெறவில்லை என்று கோவா முதல் மந்திரி மனோகர் பாரிக்கர் கூறியிருக்கிறார்.
கோவா முதல் மந்திரி மனோகர் பாரிக்கர் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:-  “காங்கிரஸ் கட்சி வெளியிட்ட ஆடியோவில் உண்மைகளை திரிக்க எடுக்கப்பட்டுள்ள தீவிர முயற்சியாகும். ரபேல் ஒப்பந்த விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியின் பொய்க்கூற்றுகள் வெளிப்பட்டுள்ள நிலையில், காங்கிரஸ் இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளது. கேபினட் கூட்டத்திலோ அல்லது வேறு எந்த ஒரு கூட்டத்திலோ இப்படி ஒரு எந்த ஒரு உரையாடலும்  நடக்கவில்லை.” இவ்வாறு அவர் கூறினார். 

Next Story