ரஷியா எஸ்-400 ரக ஏவுகணையை அடுத்த வருடத்திலிருந்து இந்தியாவிற்கு வழங்க தொடங்கும் -மத்திய அரசு
ரஷியா எஸ்-400 ரக ஏவுகணையை அடுத்த வருடத்திலிருந்து இந்தியாவிற்கு வழங்க தொடங்கும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
400 கி.மீட்டர் தொலைவில் வரும் போர் விமானங்கள், ஏவுகணைகள் மற்றும் ஆளில்லாத குட்டி விமானங்களை வழிமறித்து தாக்கி அழிக்கும் திறன் கொண்ட ரஷியாவின் எஸ்.400 ரக அதிநவீன வான்வழி பாதுகாப்பு ஏவுகணைகளை இந்திய விமானப்படைக்கு கொள்முதல் செய்ய திட்டமிடப்பட்டது. சீனா மற்றும் பாகிஸ்தானின் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள ரஷ்யாவிடம் இருந்து அதிநவீன எஸ்-400 ரக ஏவுகணைகளை வாங்க கடந்த சில ஆண்டுகளாக பேச்சுவார்த்தை நடைபெற்றது.
அமெரிக்காவின் பொருளாதார தடை எச்சரிக்கையை மீறி, ரூ. 40 ஆயிரம் கோடி மதிப்பில் ரஷியாவிடம் இருந்து ஏவுகணை வாங்கும் ஒப்பந்தம் தொடர்பாக இருநாடுகள் இடையே அக்டோபர் மாதம் கையெழுத்தானது.
இந்நிலையில் எஸ்-400 ரக ஏவுகணை தொடர்பான கேள்விக்கு மத்திய அமைச்சர் சுபாஷ் பாம்ரே மக்களவையில் பதில் அளிக்கையில், “ரஷியாவிடம் இருந்து எஸ்-400 ரக ஏவுகணைகள் இந்தியாவிற்கு அக்டோபர் 2020-ல் இருந்து வரத்தொடங்கும். 2023-ம் ஆண்டுக்குள் அனைத்தும் வாங்கப்படும்,” என தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story