பாரதீய ஜனதாவுக்கு பாடம் கற்பிப்பதே பகுஜன் சமாஜ் கட்சியின் நோக்கம் - பிறந்த நாளில் மாயாவதி சபதம்


பாரதீய ஜனதாவுக்கு பாடம் கற்பிப்பதே பகுஜன் சமாஜ் கட்சியின் நோக்கம் - பிறந்த நாளில் மாயாவதி சபதம்
x
தினத்தந்தி 15 Jan 2019 6:50 AM GMT (Updated: 15 Jan 2019 6:50 AM GMT)

2019 பாராளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதாவுக்கு பாடம் கற்பிப்பதே பகுஜன் சமாஜ் கட்சியின் நோக்கம் என பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி கூறினார்.





லக்னோ

பகுஜன் சமாஜ்  கட்சியின் தலைவர் மாயாவதி இன்று தனது 63 வது பிறந்த நாளை கொண்டாடினார்.  பிறந்த நாள் பரிசாக  கூட்டணியை வெற்றிபெறவைக்க வேண்டும் எனதொண்டர்களை மாயாவதி கேட்டு கொண்டார்.

பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி லக்னோவில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

2019 பாராளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதாவுக்கு பாடம் கற்பிப்பதே பகுஜன் சமாஜ் கட்சியின் நோக்கம் .  சமீபத்தில் முடிவடைந்த  5 மாநில தேர்தல்களில்  பாரதீய ஜனதாவுக்கு பாடக் புகட்டபட்டது.   இது காங்கிரசுக்கும் ஒரு பாடம் ஆகும்.. மூன்று மாநிலங்களில் காங்கிரஸ் அரசு மக்களின்  பிரச்சினையை தீர்ப்பதாக வாக்குறுதி அளித்துள்ளனர், ஆனால் அ வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. 

நாங்கள் எப்பொழுதும் ஏழைகளுக்கும், மிதமிஞ்சி வேலை செய்துவருகிறோம். தொடரும் விவசாயிகள் தற்கொலைகளை தடுக்க  100% விவசாய கடன் தள்ளுபடி செய்ய வேண்டும். ஒரு வலுவான விவசாய கடன் தள்ளுபடி கொள்கை திட்டம் கொண்டு வரவேண்டும்.

பயிர் விலைகளை உயர்த்துவதற்காக சுவாமிநாதன் ஆணையத்தின் அறிக்கையை அமல்படுத்த வேண்டும்.  நிலமுள்ள மற்றும் நிலமற்ற விவசாயிகள் கடன் வாங்கியுள்ளனர், ஆனால் அவர்களுக்கு நிவாரணம் கொடுப்பதற்கான கொள்கை திட்டம் இல்லை. பணமதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டி போன்றவையும் அவர்களது துயரத்தை அதிகரித்து உள்ளது என கூறினார்.

Next Story