அடுத்த முறை பாஜக வெற்றி பெற்றால் தேர்தல் முறையையே ஒழித்துக்கட்டிவிடும்- அரவிந்த கெஜ்ரிவால்


அடுத்த முறை பாஜக வெற்றி பெற்றால் தேர்தல் முறையையே ஒழித்துக்கட்டிவிடும்- அரவிந்த கெஜ்ரிவால்
x
தினத்தந்தி 15 Jan 2019 10:17 AM GMT (Updated: 2019-01-15T15:47:08+05:30)

பாஜக மீண்டும் வெற்றிபெற்றால் ஹிட்லரைப் போல தேர்தல் முறையையே ஒழித்துக்கட்டிவிடும் என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் எச்சரித்துள்ளார்.


புதுடெல்லி

அண்மையில் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய அமித் ஷா, வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக வெற்றிபெற்றால், அடுத்த 50 ஆண்டுகளுக்கு பாஜக ஆட்சி நீடிக்கும் என கூறியிருந்தார். இதை சுட்டிக்காட்டியுள்ள அரவிந்த் கெஜ்ரிவால், பாஜகவின் ஆட்சி முறை, சர்வாதிகாரி ஹிட்லரின் ஆட்சிபோல இருப்பதாக கூறினார். ஜெர்மனியில் ஹிட்லர் செய்ததைப் போல, இங்கும் தேர்தல் முறையை ஒழித்துக் கட்டுவதே பாஜகவின் திட்டம் என்று கூறியுள்ள கெஜ்ரிவால், பாஜகவை வீழ்த்த வீடுவீடாக சென்று ஆதரவை பெற வேண்டும் என்றும் கட்சியினருக்கு அறிவுறுத்தினார்.

அவரது இந்த கருத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள பாஜக, அரசியலமைப்புச் சட்டம் குறித்து கொஞ்சமாவது அறிவு இருந்தால், கெஜ்ரிவால் இப்படி பேசியிருப்பாரா என்று விமர்சித்துள்ளது.

Next Story