அடுத்த 10-15 ஆண்டுகளில் அனைத்து விமான நிலையங்களும் நிரம்பி வழியும்- இந்திய விமான போக்குவரத்துத் துறை


அடுத்த 10-15 ஆண்டுகளில் அனைத்து விமான நிலையங்களும் நிரம்பி வழியும்- இந்திய விமான போக்குவரத்துத் துறை
x
தினத்தந்தி 16 Jan 2019 10:16 AM GMT (Updated: 2019-01-16T15:46:15+05:30)

அடுத்த 10-15 ஆண்டுகளில் அனைத்து விமான நிலையங்களும் நிரம்பி வழியும் என இந்திய விமான போக்குவரத்துத் துறை அறிக்கையில் கூறி உள்ளது.

மும்பை

டெல்லி மற்றும் மும்பையில் வரும் 2040-ஆம் ஆண்டுக்குள் தலா 3 விமான நிலையங்கள் இயங்கும் என விமான போக்குவரத்துத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மும்பையில் நடைபெற்ற உலகளாவிய விமான போக்குவரத்து தொடர்பான கருத்தரங்கில், இந்திய போக்குவரத்துத்துறை அமைச்சகம் சார்பில், விஷன் 2040 என்ற பெயரில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

அதில், அடுத்த 10 முதல் 15 ஆண்டுகளில் நாட்டில் உள்ள அனைத்து விமான நிலையங்களும் பயணிகளால் நிரம்பி வழியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 2040 ஆம் ஆண்டு இந்தியாவில் ஆண்டுதோறும் 112 கோடி பேர் விமானத்தில் பயணம் செய்வார்கள். 

தற்போது 18.7 கோடி பேர்  பயணம் செய்கிறார்கள். ஆனால் வரும் 2040-ஆம் ஆண்டுக்குள் நாடு முழுவதும் சுமார் 200 விமான நிலையங்கள் இயங்கும் என்றும், 31 நகரங்களில் 2-வது விமான நிலையத்தின் தேவை ஏற்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

மேலும், டெல்லி மற்றும் மும்பை ஆகிய நகரங்களில் 3 விமான நிலையங்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கும் என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story