2019 மக்களவை தேர்தல் தேதி வெளியானதாக புரளி, காவல் துறையிடம் புகார்


2019 மக்களவை தேர்தல் தேதி வெளியானதாக புரளி, காவல் துறையிடம் புகார்
x
தினத்தந்தி 17 Jan 2019 12:53 PM GMT (Updated: 2019-01-17T18:23:49+05:30)

2019 மக்களவை தேர்தல் தேதி வெளியானதாக புரளி பரப்பப்பட்டதை அடுத்து காவல்துறையில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

2019 பாராளுமன்றத் தேர்தல் ஏப்ரல்-மே மாதங்களில் நடைபெற உள்ளது. அதிகாரப்பூர்வமான தகவல்கள் வெளியாகவில்லை. தேர்தல்களில் சமூக வலைதளங்களின் தாக்கம் ஆதிக்கம் செலுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே போலி செய்திகள் பரவலை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படுகிறது. கண்காணிப்பை தீவிரப்படுத்த சமூக வலைதள நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 

இந்நிலையில் தேர்தல் தேதி தொடர்பாகவே புரளி பரப்பப்பட்டுள்ளது. அதாவது 
2019 மக்களவைத் தேர்தல் தேதி வெளியானதாக சமூக வலைதளங்களில் போலி செய்தி பரவியுள்ளது. 

இந்நிலையில் தேர்தல் தேதி வெளியானதாக புரளி பரப்பப்பட்டதை அடுத்து காவல்துறையில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டதை அடுத்து இவ்விவகாரம் தொடர்பாக விசாரணையை மேற்கொள்ளுமாறு டெல்லி காவல்துறையிடம் அம்மாநில தேர்தல் அதிகாரி புகாரை தெரிவித்துள்ளார். சமூக வலைதளங்களில் பரவும் செய்தி தவறானது. சமூகவலைதளங்களில் வதந்தி பரப்பும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.


Next Story