ஜி.எஸ்.டி. குறைப்பால் ஹஜ் பயண விமான கட்டணம் குறையும் மத்திய அரசு தகவல்


ஜி.எஸ்.டி. குறைப்பால் ஹஜ் பயண விமான கட்டணம் குறையும் மத்திய அரசு தகவல்
x
தினத்தந்தி 17 Jan 2019 10:47 PM GMT (Updated: 2019-01-18T04:17:26+05:30)

மத்திய சிறுபான்மையினர் விவகாரத்துறை மந்திரி முக்தார் அப்பாஸ் நக்வி, டெல்லியில் புதிய ஹஜ் அலுவலகத்தை திறந்துவைத்தார். அப்போது அவர் பேசியதாவது:–

புதுடெல்லி, 

ஹஜ் பயணத்துக்கான ஜி.எஸ்.டி., 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டு உள்ளது. இதனால் இந்த ஆண்டு ஹஜ் பயண விமான கட்டணம் கணிசமாக குறையும். கட்டணத்தில் சுமார் ரூ.113 கோடி மிச்சமாகும் என்று கருதுகிறோம். ஆண் துணை இன்றி ஹஜ் பயணம் செல்ல இந்த ஆண்டு 2 ஆயிரத்து 340 பெண்கள் விண்ணப்பித்து உள்ளனர்.

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story