பெட்ரோல், டீசல் விலை இன்றும் உயர்வு


பெட்ரோல், டீசல் விலை இன்றும் உயர்வு
x
தினத்தந்தி 18 Jan 2019 1:24 AM GMT (Updated: 2019-01-18T06:54:17+05:30)

பெட்ரோல், டீசல் விலை மீண்டும் தினந்தோறும் உயரத்துவங்கியுள்ளது வாகன ஓட்டிகளுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை,

சர்வதேச கச்சா எண்ணெய் விலைக்கு தகுந்தாற்போல் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை தினசரி ஏற்ற இறக்கத்துடன் விற்பனை செய்து வருகின்றன. இதனால், பெட்ரோல் விலையின் தாக்கம் வாகன ஓட்டிகளிடையே பெரிதாக தெரிவது இல்லை. 

இந்த நிலையில், கடந்த ஒருவாரத்திற்கும் மேலாக பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து விலை ஏற்றத்தை சந்தித்து வருகின்றன. எண்ணைய் நிறுவனங்கள் இன்று வெளியிட்ட அறிவிப்பின் படி, பெட்ரோல் லிட்டருக்கு 8 காசுகள் அதிகரித்து ரூ.72.23-ஆகவும், டீசல் 20 காசுகள் அதிகரித்து 68.62 ஆகவும் விற்பனையாகிறது. 


Next Story