மத்திய அரசு 36 ரபேல் விமானங்களை மட்டும் வாங்குவது ஏன்? -ப.சிதம்பரம் கேள்வி


மத்திய அரசு 36 ரபேல் விமானங்களை மட்டும் வாங்குவது ஏன்? -ப.சிதம்பரம் கேள்வி
x
தினத்தந்தி 18 Jan 2019 10:17 AM GMT (Updated: 18 Jan 2019 10:17 AM GMT)

மத்திய அரசு 36 ரபேல் விமானங்களை மட்டும் வாங்குவது ஏன்? என காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.

புதுடெல்லி,

பிரான்ஸ் நாட்டிடம் இருந்து ரபேல் போர் விமானங்களை வாங்குவதில் ஊழல் நடந்துள்ளது என காங்கிரஸ் குற்றம் சாட்டி வருகிறது. மத்திய அரசு மறுப்பு தெரிவிக்கிறது. விலை விபரங்களை வெளியிடவும் மறுக்கிறது. இந்நிலையில் இந்திய விமானப்படைக்கு 126 விமானங்கள் தேவையென்ற நிலையில் 36 விமானங்களை மட்டும் வாங்க பிரதமர் மோடி முடிவு எடுத்ததால் ஒவ்வொரு விமானத்தின் விலையும் 41.42 சதவீதம் உயர்ந்துள்ளது என பத்திரிக்கை செய்தி வெளியாகியது.

இவ்விவகாரத்தை கையில் எடுத்துள்ள காங்கிரஸ் கட்சியின் தலைவர் ப.சிதம்பரம், ரபேல் விவகாரத்தில் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளது, விமானப்படைக்கு 126 விமானங்கள் தேவைப்படும் நிலையில் மத்திய அரசு 36 ரபேல் விமானங்களை மட்டும் வாங்குவது ஏன்? என்ற கேள்வி எழுகிறது என கூறியுள்ளார். விமானப்படைக்கு தேவையான 7 ஸ்குவார்டன் (ஒரு ஸ்குவார்டன் என்பது 18 விமானங்களை கொண்ட தொகுப்பாகும்) போர் விமானங்களுக்கு பதிலாக வெறும் 36 (2 ஸ்குவார்டன்) போர் விமானங்களை வாங்கியதால் தேசிய பாதுகாப்பு சமரசம் செய்யப்பட்டுள்ளது எனவும் குற்றம் சாட்டியுள்ளார். 

காங்கிரஸ் தலைவர் ஜோதிர் ஆதித்ய சிந்தியாவும் விலை உயர்வு தொடர்பாக பிரதமர் மோடி பதிலளிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். 

Next Story