ராஞ்சி மருத்துவமனையில் லாலு பிரசாத்துடன் டி.ராஜா எம்.பி. சந்திப்பு


ராஞ்சி மருத்துவமனையில் லாலு பிரசாத்துடன் டி.ராஜா எம்.பி. சந்திப்பு
x
தினத்தந்தி 19 Jan 2019 3:35 PM GMT (Updated: 2019-01-19T21:07:03+05:30)

ராஞ்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் லாலு பிரசாத்துடன் டி.ராஜா எம்.பி. சந்தித்து பேசினார்.

ராஞ்சி, 

மாட்டுத்தீவன ஊழல் வழக்கில் சிறை தண்டனை பெற்ற ராஷ்டிரீய ஜனதா தளம் கட்சி தலைவர் லாலு பிரசாத் யாதவ், உடல்நல குறைவு காரணமாக ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா எம்.பி. நேற்று லாலு பிரசாத் யாதவை நேரில் சந்தித்து பேசினார்.

பின்னர் பேட்டியளித்த டி.ராஜா, ‘லாலு பிரசாத் விரைவில் குணமடைவார் என்று நம்புகிறேன். நாட்டின் நிலைமை மோசமாக உள்ளது. தொழிலாளர்கள், விவசாயிகள் மீதான அரசின் தாக்குதல் தொடர்கிறது. வரும் நாடாளுமன்ற தேர்தலில் ஆட்சிப்பொறுப்பில் இருந்து பா.ஜ.க.வை இறக்குவோம். இதற்காக லாலு பிரசாத்துடன் இணைந்து செயல்படுவோம்’ என்று தெரிவித்தார்.

Next Story