மேற்கு வங்காளத்தில் வேட்பாளர்கள் தேர்வில் பா.ஜனதா தீவிரம் திரிணாமுல் காங்கிரசில் இருந்து வந்தவர்களுக்கு வாய்ப்பு


மேற்கு வங்காளத்தில் வேட்பாளர்கள் தேர்வில் பா.ஜனதா தீவிரம் திரிணாமுல் காங்கிரசில் இருந்து வந்தவர்களுக்கு வாய்ப்பு
x
தினத்தந்தி 19 Jan 2019 4:00 PM GMT (Updated: 2019-01-19T21:30:34+05:30)

திரிணாமுல் காங்கிரசில் இருந்து விலகி வந்தவர்களுக்கு நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட பா.ஜனதா வாய்ப்பு வழங்க திட்டமிட்டுள்ளது.

புதுடெல்லி, 

மேற்குவங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி பா.ஜனதாவுக்கு எதிராக கட்சிகளை திரட்டி போராடி வரும் நிலையில், பா.ஜனதா அந்த மாநிலத்தில் சினிமா பிரபலங்கள், குறிப்பாக திரிணாமுல் காங்கிரசில் இருந்து விலகி வந்தவர்களுக்கு நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்க திட்டமிட்டுள்ளது.

மம்தா பானர்ஜியின் கட்சியில் இருந்துவந்த நடிகைகள் லாக்கெட் சட்டர்ஜி, மவுஷ்மி சட்டர்ஜி, தற்போதைய எம்.பி. பபுல் சுப்ரியோ, சவுமித்ராகான், அனுபம் ஹஸ்ரா, ஹுமான்யூன் கபிர் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். முன்னாள் பார்வர்டு பிளாக் தலைவர் நர்ஹரி மஹதோ மற்றும் பா.ஜனதா தலைவர்கள் திலிப் கோஷ், ராகுல் சின்ஹா, சமிக் பட்டாச்சார்ஜி, தேப்ஜித் சர்க்கார் ஆகியோருக்கும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கலாம் என பா.ஜனதா வட்டாரங்கள் தெரிவித்தன.

சட்டமன்ற தேர்தலில் மம்தா பானர்ஜியை எதிர்த்து போட்டியிட்ட சுபாஷ் சந்திரபோசின் வாரிசான சந்திரபோசுக்கும் ‘சீட்’ கிடைக்கும் என தெரிகிறது.

Next Story