ரபேல் ஒப்பந்த விவகாரம்: நிர்மலா சீதாராமன் மீது காங்கிரஸ் தாக்கு

ரபேல் ஒப்பந்த விவகாரம் தொடர்பாக, நிர்மலா சீதாராமன் மீது காங்கிரஸ் குற்றம் சாட்டி உள்ளது.
புதுடெல்லி,
ரபேல் ஒப்பந்தத்தின் இந்திய பங்குதாரர் நிறுவனமாக அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் சேர்க்கப்பட்டது தொடர்பாக ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் மீது காங்கிரஸ் கட்சி கடுமையாக சாடியுள்ளது. நாட்டு நலனுடன், தனது கார்பரேட் நண்பர்களையும் பாதுகாக்கும் பாதுகாப்பு மந்திரி நிர்மலா சீதாராமன்தான் தற்போதைய நிலையில் மிகவும் பாதுகாப்பற்ற மந்திரியாக இருப்பதாக அந்த கட்சி குற்றம் சாட்டி உள்ளது.
இது தொடர்பாக கட்சியின் செய்தி தொடர்பாளர் பிரியங்கா சதுர்வேதி கூறுகையில், ‘டசால்ட் நிறுவனத்துக்கும், இந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் (எச்.ஏ.எல்.) நிறுவனத்துக்கும் இடையே பணிப்பகிர்வு ஒப்பந்தம் கையெழுத்தானதாக டசால்ட் நிறுவனம் டுவிட்டர் தளத்தில் கூறியுள்ளது. அதைப்போல ரூ.36 ஆயிரம் கோடி பணிப்பகிர்வு ஒப்பந்தத்தில் கடந்த 2014-ம் ஆண்டு மார்ச் 13-ந் தேதி எச்.ஏ.எல். நிறுவனம் கையெழுத்து போட்டுள்ளது. அந்த வகையில் 108 ரபேல் போர் விமானங்களுக்கான இந்திய பங்குதாரர் ஒப்பந்தமும் எச்.ஏ.எல்.க்கு கிடைத்திருக்கும். ஆனால் அந்த ஒப்பந்தத்தை பறிக்க வேண்டிய கட்டாயம் என்ன? நாடாளுமன்றத்தில் யாருடைய நலனை ராணுவ மந்திரி பாதுகாத்திருக்கிறார்?’ என கேள்வி எழுப்பினார்.
முன்னதாக அரசின் நலன்களை கார்பரேட்டுகளின் கையில் அடகு வைக்க முடியாது என நிர்மலா சீதாராமன் கூறியிருந்த நிலையில், இந்த கேள்வியை காங்கிரஸ் கட்சி எழுப்பி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Tags :
Next Story