டெல்லியில் பட்டப்பகலில் தமிழ் நடிகையை தாக்கி கொள்ளை: தக் தக் கும்பல் கைவரிசை!


டெல்லியில் பட்டப்பகலில் தமிழ் நடிகையை தாக்கி கொள்ளை: தக் தக் கும்பல் கைவரிசை!
x
தினத்தந்தி 21 Jan 2019 11:22 AM IST (Updated: 21 Jan 2019 11:50 AM IST)
t-max-icont-min-icon

டெல்லியில் பட்டப்பகலில் தமிழ்நடிகையை தக் தக் கும்பல் தாக்கி கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

புதுடெல்லி,

சென்னையை சேர்ந்தவர் நடிகை பர்ஹீன் இவர் பிந்தியா என்ற பெயரில், கமல்ஹாசன் ஜோடியாக கலைஞன் என்ற படத்தில் நடித்துள்ளார். தொடர்ந்து சில தமிழ்ப் படங்களிலும் நடித்துள்ளார். பின்னர் பர்ஹீன் என்ற பெயரில், ஜான் தேரே நாம் என்ற படம் மூலம் இந்தியில் அறிமுக மானார். அங்கு நடித்து வந்த இவர், கன்னடம், மலையாளம் மொழி படங்களிலும் நடித்துள்ளார்.

இவர் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் மனோஜ் பிரபாகர் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். தற்போது  டெல்லியில் உள்ள சர்வ்பிரியா நகரில் வசித்துவருகிறார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.

இந்நிலையில், பர்ஹீன், தனது காரில் நேற்று நண்பகல் மால் ஒன்றுக்குச் சென்றுகொண்டிருந்தார்.  அப்போது அவர் காரை பின் தொடர்ந்து வந்த நான்கு பேர் கொண்ட கும்பல், திடீரென சிக்னல் அருகே கண்ணாடியை உடைக்க முயன்றது. இதையடுத்து பர்ஹீன் காரை ஓரமாக நிறுத்திவிட்டு, ஏன் இப்படி செய்தீர்கள் என் று கோபமாகக் கேட்டார்.

காரை சரியாக ஓட்டத்தெரியாதா? என்று ஆவேசமாக அந்த கும்பல் திட்டியது. பிறகு காரில் இருந்த பர்ஸ், மொபைல்போன்கள், சில ஆவணங்களை சுருட்டிக் கொண்டு தப்ப முயன்றது.  பர்ஸில் ரூ.16 ஆயிரம் இருந்தது.  இதனை அறிந்த நடிகை பர்ஹீன் அவர்களை தப்ப விடாமல், மறித்து நின்றுகொண்டு, உதவிக்கு ஆட்களை அழைத்தார். உடனடியாக சுதாரித்த கும்பல்,பர்ஹீனை சரமாரியாகத் தாக்கிவிட்டு தப்பியோடியது. இதில் காயமடைந்த அவர், ரோட்டில் மயங்கி விழுந்தார். 

அப்போது அங்கு வந்த ராணுவ வீரர் ஒருவர், போலீசாருக்கு இதுபற்றி தகவல் கொடுத்தார். அவர்கள் உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்து பர்ஹீனிடம் விசாரித்தனர். பின்னர் வழக்குப் பதிவு செய்த போலீசார், சிசிடிவி கேமரா உதவியோடு, தப்பியோடிய கும்பலை தேடிவருகின்றனர்.

இந்த தக் தக் கும்பலின் வேலை சிக்னலில் நிற்கும் கார் கண்ணாடிகளை உடைத்து டிரைவர்களின் கவனத்தை திசைத் திருப்பி கொள்ளையடிப்பது.  

மும்பையில் இப்படி கொள்ளை சம்பவங்களை நடத்தி வந்த இவர்கள் தற்போது டெல்லியில் தங்கள் கைவரிசையை காட்டுவதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
1 More update

Next Story