பிரதமராக மம்தா பானர்ஜிக்கு எல்லா தகுதிகளும் உள்ளன; கர்நாடக முதல்வர் குமாரசாமி

பிரதமராக மம்தா பானர்ஜிக்கு எல்லா தகுதிகளும் உள்ளன என கர்நாடக முதல்வர் குமாரசாமி கூறி உள்ளார்.
புதுடெல்லி
கர்நாடக முதல்வர் குமாரசாமி கூறியதாவது:-
தேர்தலுக்கு முன்னர் ஒரு தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டிய அவசியம் இல்லை. தலைமையை தீர்மானித்தல் என்பது தேர்தல் வெற்றி பெற ஒரு அளவுகோல் அல்ல.
நாட்டு மக்கள் நரேந்திர மோடி நிர்வாகத்தால் முற்றிலும் ஏமாற்றமடைந்துள்ளனர். பல்வேறு மாநிலங்களுக்கு சொந்தமான பிரச்சினைகள் உள்ளன. தேர்தலுக்கு முன்பு ஒரு தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டிய அவசியம் இல்லை.
திறமையான தலைவர்கள் நாட்டை முன்னேற்ற பாதைக்கு அழைத்துச்செல்ல முடியும். இந்த தலைவர்கள் முந்தைய அரசாங்கங்கள் தோல்வியடைந்த விஷயங்களை முன்னெடுத்து செல்ல முடியும்.
தேர்தல் முடிந்ததும் எல்லோரும் ஆலோசித்து எங்கள் தலைவரை தேர்வு செய்வோம்.
மம்தா பானர்ஜி எளிமையான மிகவும் சிறந்த நிர்வாகி ஆவார். நாட்டை வழி நடத்த மம்தா பானர்ஜி திறமையான தலைவர் என நான் நினைக்கிறேன். மேற்கு வங்காளத்தை பல ஆண்டுகளாக அவர் சிறப்பாக வழி நடத்தி அதனை நிரூபித்து உள்ளார் என கூறினார்.
Related Tags :
Next Story