நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக-பா.ஜனதா கூட்டணி அமையும் -மத்திய அமைச்சர்


நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக-பா.ஜனதா கூட்டணி அமையும்  -மத்திய அமைச்சர்
x
தினத்தந்தி 22 Jan 2019 10:50 AM GMT (Updated: 2019-01-22T16:20:33+05:30)

நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக - பா.ஜனதா கூட்டணி அமையும் என மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே கூறியுள்ளார்.

புதுச்சேரி,

2019 தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் தயாராகி வரும் நிலையில் திமுக - காங்கிரஸ் கூட்டணி உறுதியாகியுள்ளது. அதிமுக தனித்து போட்டியிடுமா? அல்லது பா.ஜனதாவுடன் கூட்டணி அமைக்குமா? என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக - பா.ஜனதா கூட்டணி அமையும் என மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே கூறியுள்ளார். மத்திய அமைச்சரும்,  இந்திய குடியரசுக் கட்சி தலைவருமான ராம்தாஸ் அத்வாலே புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஜெயலலிதாவின் கனவை நிறைவேற்ற டிடிவி தினகரன் அதிமுகவுடன் இணைய வேண்டும் என்று கூறியுள்ளார்.

மேலும் அதிமுகவும், அமமுகவும் இணைய நானே முயற்சிகளை மேற்கொள்வேன் என்றும் குறிப்பிட்டுள்ளார். 

Next Story