பா.ஜ.க. ரூ.553 கோடியை தெரியாத ஆதாரங்களில் இருந்து வருமானமாக பெற்று உள்ளது


பா.ஜ.க. ரூ.553 கோடியை தெரியாத ஆதாரங்களில் இருந்து வருமானமாக பெற்று உள்ளது
x
தினத்தந்தி 23 Jan 2019 10:29 AM GMT (Updated: 23 Jan 2019 10:29 AM GMT)

மத்தியில் ஆளும் பாரதீய ஜனதா கட்சிக்கு 2017-2018 ஆம் ஆண்டு ரூ.553 கோடியை தெரியாத ஆதாரங்களில் இருந்து வருமானமாக பெற்று உள்ளது.

புதுடெல்லி,

தேர்தல் கண்காணிப்புக்குழுவின் அறிக்கையின்படி, இன்று வெளியிடப்பட்ட ஜனநாயக சீர்திருத்த அமைப்பு (ADR) அறிக்கையின் படி  மொத்தம்  ரூ. 689.44 கோடி அறியப்படாத ஆதாரங்களில் இருந்து வருமானம் வந்ததாக தேசிய கட்சிகளால்  அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பாரதீய ஜனதாவுக்கு மட்டும் ரூ. 553.38 கோடியாகும். தெரியாத ஆதாரங்கள் IT வருமானத்தில் அறிவிக்கப்பட்ட வருமானமாகும். ஆனால் 20,000 ரூபாய்க்கும் குறைவான நன்கொடைகளுக்கு வருமான ஆதாரங்களை வழங்கவில்லை.

இத்தகைய அறியப்படாத ஆதாரங்கள், தேர்தல் பத்திரங்கள், கூப்பன்கள், நிவாரண நிதிகள், இதர வருமானம், தன்னார்வ பங்களிப்பு ஆகியவற்றின் மூலம் கிடைக்கும் நன்கொடைகள் அடங்கும். இத்தகைய தன்னார்வ  நன்கொடையாளர்களின் விவரங்கள் பொது டொமைனில் கிடைக்கவில்லை.

தற்போது 20,000 ரூபாய்க்கும் குறைவாக கொடுக்கும் தனிநபர்கள் அல்லது அமைப்புகளின் பெயர்களை அரசியல் கட்சிகள் வெளியிட வேண்டிய அவசியம் இல்லை.

இதன் விளைவாக, நிதிகளில் 50 சதவீதத்திற்கும் அதிகமானவை கண்டுபிடிக்க முடியாதவை. அவை 'தெரியாத' மூலங்களிலிருந்து பெறப்படுகின்றன. தேசிய அரசியல் கட்சிகள் ஜூன் 2013 ல் CIC ஆணையால் ஆர்.டி.ஐ. சட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டிருந்தாலும், அவர்கள் இந்த முடிவை இன்னும் நிறைவேற்றவில்லை என ஜனநாயக சீர்திருத்த அமைப்பு கூறி உள்ளது.

அறிக்கையின் படி, 2017-18ல் ஆறு தேசிய அரசியல் கட்சிகளின் மொத்த வருமானம் 1,293.05 கோடி ரூபாய். நன்கொடையாளர்களின் மொத்த வருமானம் ரூ. 467.13 கோடி அல்லது மொத்த வருவாயில் 36 சதவீதமாகும். இதர ஆதாரங்கள் (சொத்துகளின் விற்பனை, உறுப்பினர் கட்டணம், வங்கி வட்டி, பிரசுரங்கள் விற்பனை, கட்சி வரி) ஆகியவற்றின் வருமானம் ரூ. 136.48 கோடி அல்லது மொத்த வருவாயில் 11 சதவீதமாகும்.

தெரியாத ஆதாரங்களில் இருந்து அரசியல் கட்சிகளின் மொத்த வருவாய் (ஐ.டி. ரிட்டன்களில் குறிப்பிடப்பட்ட வருவாயில் தெரியாத மூலங்கள்) ரூ. 689.44 கோடி. இது கட்சிகளின் மொத்த வருமானத்தில் 53 சதவீதம் ஆகும். ரூ. 689.44 கோடி தெரியாத ஆதாரங்களின் வருமானத்தில் தேர்தல் பத்திரங்களின் வருவாயின் பங்கு ரூ. 215 கோடி அல்லது 31 சதவீதம் ஆகும்.

2017-18 காலப்பகுதியில் பி.ஜே.பி, 93 சதவிகிதத்திற்கும் அதிகமாக ரூ. 20,000-க்கும் மேலான நன்கொடைகளை பெற்றுள்ளது.மொத்தம் உள்ள  469.89 கோடி ரூபாய்களில் மொத்தம் 437.04 கோடி ரூபாயை, கூட்டு நிறுவனங்களும், தனிநபர்களும் நன்கொடை அளித்தனர்.  பி.ஜே.பி,  இதனை 2,977 நன்கொடைகளில் பெற்று உள்ளது.

கடந்த 14 ஆண்டுகளில் (2004-05 முதல் 2017-18 வரை) தேசிய கட்சிகள் ரூ. 8,721.14 கோடியை தெரியாத ஆதாரங்களில் இருந்து பெற்று உள்ளன.

தற்போது ஏழு தேசிய கட்சிகள் உள்ளன. பாரதீய ஜனதா, காங்கிரஸ், பகுஜன் சமாஜ் கட்சி, தேசியவாத காங்கிரஸ் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ), மார்க்சிஸ்ட் மற்றும்  திரிணாமுல் காங்கிரஸ் ஆகியவையாகும்.

Next Story