பேரிடர் மீட்பில் சிறப்பான செயல்பாட்டுக்கு நேதாஜி பெயரில் விருது மத்திய அரசு அறிவிப்பு

பேரிடர் மீட்பில் சிறப்பான செயல்பாட்டுக்கு நேதாஜி பெயரில் விருது மத்திய அரசு அறிவிப்பு
x
தினத்தந்தி 23 Jan 2019 7:15 PM GMT (Updated: 23 Jan 2019 5:35 PM GMT)

பேரிடர் காலங்களில் மேலாண்மை மற்றும் மீட்பு பணிகளில் சிறப்பாக செயல்பட்ட தனிநபர்கள் மற்றும் அமைப்புகளுக்கு வழங்க ‘சுபாஷ் சந்திரபோஸ் ஆப்த பிரபந்தன் புரஸ்கார்’ என்ற புதிய விருதை மத்திய அரசு உருவாக்கி உள்ளது.

புதுடெல்லி, 

இந்த விருது, ஆண்டுதோறும் நேதாஜி பிறந்தநாளான ஜனவரி 23–ந் தேதி அறிவிக்கப்படும். விருதுக்கு உரியவருக்கு ரூ.51 லட்சம் ரொக்க பரிசும், சான்றிதழும் அளிக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

இந்த ஆண்டுக்கான இவ்விருதுக்கு தேசிய பேரிடர் மீட்பு படையின் 18–வது பட்டாலியன் தேர்வு செய்யப்பட்டுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தை தலைமையிடமாக கொண்ட இப்படைப்பிரிவு, 2015–ம் ஆண்டு சென்னையில் ஏற்பட்ட வெள்ளம், சில மாதங்களுக்கு முன்பு கேரளாவில் ஏற்பட்ட வெள்ளம் உள்பட பல பேரிடர்களின்போது சிறப்பாக செயல்பட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Next Story