பிரியங்காவுக்கு அரசியல் பொறுப்பு வழங்கியது பற்றி பிரதமர் மோடி கிண்டல்


பிரியங்காவுக்கு அரசியல் பொறுப்பு வழங்கியது பற்றி பிரதமர் மோடி கிண்டல்
x
தினத்தந்தி 24 Jan 2019 1:00 AM IST (Updated: 23 Jan 2019 11:17 PM IST)
t-max-icont-min-icon

பல இடங்களில் குடும்பமே கட்சியாக உள்ளது. ஆனால் பா.ஜ.க.வினருக்கு கட்சியே குடும்பம்.

புதுடெல்லி, 

பிரியங்கா காந்திக்கு காங்கிரசில் பொறுப்பு வழங்கப்பட்டது குறித்து பிரதமர் நரேந்திரமோடி நேற்று மராட்டிய மாநில பா.ஜனதா தொண்டர்கள் மத்தியில் காணொலி காட்சி மூலம் பேசும்போது சூசகமாக கூறியதாவது:–

பல இடங்களில் குடும்பமே கட்சியாக உள்ளது. ஆனால் பா.ஜ.க.வினருக்கு கட்சியே குடும்பம். பா.ஜனதாவில் முடிவுகள் ஒரு தனிநபரின் நலனுக்காகவோ, ஒரு குடும்பத்தின் நலனுக்காகவோ எடுக்கப்படமாட்டாது. கட்சி தொண்டர்களுக்கு என்ன தேவையோ அதன் அடிப்படையில் முடிவு எடுக்கப்படும். ஜனநாயக கொள்கைகள் அடிப்படையில் பா.ஜனதா செயல்படுகிறது. ஜனநாயகம் நமது நரம்பிலேயே ஓடுகிறது. அதனால் தான் நாட்டு மக்கள் நமது கட்சியுடன் நெருக்கமாக உள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.
1 More update

Next Story