கும்பமேளா நடைபெறும் பிரயாக்ராஜ் நகரில் கிடந்த மர்ம பெட்டியால் பரபரப்பு

கும்பமேளா நடைபெறும் பிரயாக்ராஜ் நகரில் கிடந்த மர்ம பெட்டியால் பரபரப்பு ஏற்பட்டது.
பிரயாக்ராஜ்,
பிரயாக்ராஜில் கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய மூன்று நதிகளும் சங்கமிக்கும் இடத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மகா கும்பமேளா நடைபெறும். 6 ஆண்டுகளுக்கு ஒருமுறை அரை கும்பமேளா நடக்கிறது. இவ்வாண்டு நடைபெறும் அரை கும்பமேளா கடந்த 15-ம் தொடங்கி நடைபெற்று வருகிறது. லட்சக்கணக்கான பக்தர்கள் கங்கையில் நீராடி, பிராத்தனை செய்து வருகிறார்கள். அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலமாக செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் ஜார்ஜ் டவுணில் கம்லா நேரு மருத்துவமனையில் மர்ம பெட்டியொன்று கிடந்தது. இதுதொடர்பாக தகவல் அறிந்த போலீசார் அதனை கைப்பற்றி வெடிகுண்டு செயல் இழப்பு குழுவிற்கு அழைப்பு விடுத்தனர். பின்னர் சோதனை செய்து பார்த்ததில் அதில் ஐடி கார்டுகள் இருந்துள்ளது, சந்தேகத்திற்கு இடமாக எதுவும் இல்லை. மர்ம பெட்டியால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story