நாளை 69-வது குடியரசு தின அணிவகுப்பில் முதன் முதலாக இடம்பெறப் போகும் நவீன ஆயுதங்கள்

டெல்லி ராஜ்பாத்தில் நாளை நடைபெறும் 69-வது குடியரசு தின அணிவகுப்பில் முதன் முதலாக நவீன ஆயுதங்கள் இடம்பெறப் போகிறது.
புதுடெல்லி,
இந்தியாவின் 69-வது குடியரசு தினம் நாளை கொண்டாடப்படுகிறது. இந்த குடியரசு தின விழாவில் தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ராமபோசா பிரதம விருந்தினராக கலந்து கொள்கிறார். குடியரசு தினத்தை முன்னிட்டு நாளை நடைபெறும் அணிவகுப்பு மரியாதையில் இந்திய தேசிய இராணுவ (ஐ.என்.ஏ.) வீரர்கள் முதல் தடவையாக பங்கேற்கிறார்கள். முதன்முதலாக பெண்களுக்கு முன்னுரிமை வழங்குவதன் மூலம் இந்த ஆண்டு குடியரசு தின அணிவகுப்பு வரலாற்றில் இடம் பெறும்.
ராஜ்பாத்தில் காலை 10 மணிக்கு தொடங்க உள்ள இந்த அணி வகுப்பு 90 நிமிடம் நடைபெறும். இந்த அணி வகுப்பில் முதல் முறையாக 98 முதல் 100 வயதுடைய 4 ஐ.என்.ஏ. வீரர்கள் பங்கேற்கிறார்கள்.
ஜட்டிரபா ஆலையில் இருந்து பெறப்பட்ட உயிரி எரிபொருள், பயன்படுத்தப்படும் AN32 என்ற வானூர்தி முதல் தடவையாக குடியரசு தின அணிவகுப்பில் பங்கு பெறுகிறது.
ஷாங்க்நாத், இந்திய ஆயுதப்படையினருக்காக உருவாக்கப்பட்ட ஒரு பாடலானது குடியரசு தின அணிவகுப்பில் முதல் முறையாக ஒளிபரப்பப்படுகிறது.
இந்த ஆண்டு குடியரசு தின அணிவகுப்பில் பெண்கள் பங்கேற்பு மிக அதிகமாக இருக்கும்.
அமெரிக்காவில் இருந்து வாங்கப்பட்ட M-77 A2 அல்ட்ரா லைட் ஹோவிட்ஸர் (ULH) போன்ற சமீபத்திய நவீன ஆயுதங்கள் அணிவகுப்பில் இடம் பெறும். இதன் மூலம் இந்தியா தனது இராணுவ வலிமையை வெளிப்படுத்தும்.
Related Tags :
Next Story