பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ள பிரணாப் முகர்ஜிக்கு ராகுல்காந்தி வாழ்த்து


பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ள பிரணாப் முகர்ஜிக்கு ராகுல்காந்தி வாழ்த்து
x
தினத்தந்தி 25 Jan 2019 5:29 PM GMT (Updated: 2019-01-25T22:59:47+05:30)

பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ள முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

நாளை குடியரசு தினவிழா கொண்டாடப்படும் நிலையில், 3 பேருக்கு (பிரணாப் முகர்ஜி,சமூக சேவகர் நனாஜி தேஷ்முக், கவிஞர் பூபென் ஹசாரிகா)  இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டன. அதன்படி 4 பேருக்கு பத்ம விபூஷண் , 14 பேருக்கு பத்ம பூஷண், 94 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகளும் என 112 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டன.

இந்நிலையில், பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ள முன்னாள் குடியரசு தலைவர் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி டுவிட்டரில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,

பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ள முன்னாள் குடியரசு தலைவர் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு வாழ்த்துக்கள். நாட்டின் கட்டமைப்பு, பொதுசேவைக்கான பிரணாப்பின் பங்களிப்பால் காங்கிரஸ் பெருமை கொள்கிறது என பதிவிட்டுள்ளார்.

Next Story