பத்மஸ்ரீ விருதை ஏற்க ஒடிசா முதல்வரின் சகோதரி மறுப்பு


பத்மஸ்ரீ விருதை ஏற்க ஒடிசா முதல்வரின் சகோதரி மறுப்பு
x
தினத்தந்தி 26 Jan 2019 7:12 AM GMT (Updated: 2019-01-26T13:29:23+05:30)

ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக்கின் சகோதரி கீதா மேத்தா, தனக்கு அறிவிக்கப்பட்டுள்ள பத்மஸ்ரீ விருதை ஏற்க மறுத்துள்ளார்.

புவனேஸ்வர்,

ஒடிசா மாநில முதல்வர் நவீன் பட்நாயக்கின் சகோதரியும், எழுத்தாளருமான கீதா மேத்தாவுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டது. இந்த விருதை ஏற்க அவர் மறுத்துள்ளார்.

தன்னை அங்கீகரித்து விருது அறிவித்ததற்கு நன்றி தெரிவித்த அவர், அதேசமயம் நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் இந்த விருது தனக்கு அறிவிக்கப்பட்டுள்ளது ஏற்புடையது அல்ல என்றார்.

இது தனக்கும், மத்திய அரசுக்கும் தர்மசங்கடத்தை ஏற்படுத்துவதாக உள்ளது என கீதா மேத்தா தெரிவித்துள்ளார்.

Next Story