ஜம்மு காஷ்மீர்: ஜெய்ஷ் இ முகம்மது இயக்க பயங்கரவாதிகள் 2 பேர் சுட்டுக்கொலை


ஜம்மு காஷ்மீர்: ஜெய்ஷ்  இ முகம்மது இயக்க பயங்கரவாதிகள் 2 பேர் சுட்டுக்கொலை
x
தினத்தந்தி 1 Feb 2019 9:38 AM IST (Updated: 1 Feb 2019 9:38 AM IST)
t-max-icont-min-icon

ஜம்மு காஷ்மீரில் ஜெய்ஷ் இ முகம்மது இயக்க பயங்கரவாதிகள் 2 பேர் பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

புல்வமா, 

ஜம்மு காஷ்மீரின் புல்வமா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே பயங்கர துப்பாக்கிச்சண்டை நடைபெற்றது. இந்த துப்பாக்கிச்சண்டையின் முடிவில் பயங்கரவாதிகள் இருவர் சுட்டுக்கொல்லப்பட்டனர். 

சுட்டுக்கொல்லப்பட்ட இரண்டு பயங்கரவாதிகளும் ஜெய்ஷ் இ முகம்மது இயக்கத்தைச்சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளது. அவர்களிடம் இருந்து நவீன துப்பாக்கிகளையும் பாதுகாப்பு படையினர் கைப்பற்றினர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Next Story