மகாராஷ்டிராவில் 3 முறை அடுத்தடுத்து நிலநடுக்கம்


மகாராஷ்டிராவில் 3 முறை அடுத்தடுத்து நிலநடுக்கம்
x
தினத்தந்தி 1 Feb 2019 11:29 PM IST (Updated: 1 Feb 2019 11:29 PM IST)
t-max-icont-min-icon

மகாராஷ்டிராவில் 3 முறை அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டது.

மும்பை,

மகாராஷ்டிராவின் பால்கர் மாவட்டத்தில் இன்று 3 முறை அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் மிக அதிகமாக ரிக்டர் அளவுகோலில் 4.1 ஆக பதிவானது.

இந்த நிலநடுக்கம் இன்று மதியம் 2.06, 3.53, 4.57 மணி அளவில் ஏற்பட்டது. இது  ரிக்டர் அளவில் முறையே 4.1, 3.6 மற்றும் 3.5 என்ற அளவில் பதிவானது.

இந்த நிலநடுக்கத்தால் அந்த பகுதியில் கட்டிடங்களில் அதிர்வு ஏற்பட்டது. அச்சம் அடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி திறந்த வெளியில் தஞ்சம் புகுந்தனர். இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து முழுமையான தகவல் வெளியாகவில்லை.

Next Story