எக்ஸ்பிரெஸ் ரெயில் விபத்து; பலியானோர் குடும்பத்தினருக்கு முதல் மந்திரி நிதீஷ் குமார் இரங்கல்


எக்ஸ்பிரெஸ் ரெயில் விபத்து; பலியானோர் குடும்பத்தினருக்கு முதல் மந்திரி நிதீஷ் குமார் இரங்கல்
x
தினத்தந்தி 3 Feb 2019 8:49 AM IST (Updated: 3 Feb 2019 8:49 AM IST)
t-max-icont-min-icon

எக்ஸ்பிரெஸ் ரெயில் விபத்தில் சிக்கி பலியானோர் குடும்பத்தினருக்கு முதல் மந்திரி நிதீஷ் குமார் இரங்கல் தெரிவித்து உள்ளார்.

ஜோக்பனி-ஆனந்த் விகார் செல்லும் சீமாஞ்சல் எக்ஸ்பிரெஸ் ரெயில் இன்று அதிகாலை 3.58 மணியளவில் சஹடாய் பஜர்க் பகுதியருகே விபத்தில் சிக்கி தடம் புரண்டது.

இந்த விபத்தில் 9 ரெயில் பெட்டிகள் தடம் புரண்டன.  6 பேர் பலியாகி உள்ளனர்.  பலர் காயமடைந்து உள்ளனர்.  இதனை தொடர்ந்து மீட்பு மற்றும் நிவாரண பணிகள் நடந்து வருகின்றன.  

தடம் புரண்ட ரெயில் பெட்டிகளில் 3 படுக்கை வசதிகள் கொண்ட பெட்டிகள் (எஸ் 8, எஸ் 9, எஸ் 10), ஒரு பொது பெட்டி மற்றும் ஒரு ஏ.சி. (பி 3) பெட்டி ஆகியவையும் அடங்கும்.  இந்த விபத்தில் காயம் அடைந்தவர்கள், பலியானோர் ஆகியோரை பற்றிய அடையாளம் காணும் பணியும் நடந்து வருகிறது.  தொடர்ந்து மீட்பு பணிகள் நடந்து வருகின்றன.

இந்த நிலையில், எக்ஸ்பிரெஸ் ரெயில் விபத்தில் சிக்கி பலியானோர் குடும்பத்தினருக்கு பீகார் முதல் மந்திரி நிதீஷ் குமார் இரங்கல் தெரிவித்து உள்ளார்.  அனைத்து வித உதவிகளையும் மேற்கொள்ளும்படி அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டும் உள்ளார்.

Next Story