பிரதமர் மோடி அரசியலில் இருந்து ஓய்வு பெற்றால், நானும் அரசியலை விட்டு விலகி விடுவேன் -ஸ்மிருதி இரானி


பிரதமர் மோடி அரசியலில் இருந்து ஓய்வு பெற்றால், நானும் அரசியலை விட்டு விலகி விடுவேன் -ஸ்மிருதி இரானி
x
தினத்தந்தி 4 Feb 2019 1:46 PM IST (Updated: 4 Feb 2019 1:46 PM IST)
t-max-icont-min-icon

பிரதமர் மோடி அரசியலில் இருந்து ஓய்வு பெற்றால், நானும் அரசியலை விட்டு விலகி விடுவேன் என்று மத்திய ஜவுளித்துறை மந்திரி ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

புனேவில் நடைபெற்ற விழா ஒன்றில் கலந்து கொண்ட மத்திய மந்திரி ஸ்மிருதி இரானி செய்தியாளர்களிடம் பேசியதாவது:-

சிறந்த தலைவர்களுடன் அரசியலில் பணியாற்றி வருகிறேன். முன்னாள் பிரதமர் வாஜ்பாய், இப்போதைய பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் தலைமையின் கீழ் பணியாற்றியது எனக்கு கிடைத்த அதிர்ஷ்டம். பிரதமர் மோடி அரசியலை விட்டு ஓய்வு பெறும்போது, நானும் அரசியலில் இருந்து விலகி விடுவேன். 

அமேதி தொகுதியில் போட்டியிடுவீர்களா? என்ற கேள்வியை பலர் என்னிடம் கேட்கிறார்கள். அதனை கட்சித்தலைவர் அமித்ஷா தான் முடிவு செய்வார் என்றார்.

Next Story