ரூ.1 லட்சம் கோடி அளவிலான மொத்த கூடுதல் செலவினத்திற்கு நாடாளுமன்ற ஒப்புதலை கோரியது அரசு


ரூ.1 லட்சம் கோடி அளவிலான மொத்த கூடுதல் செலவினத்திற்கு நாடாளுமன்ற ஒப்புதலை கோரியது அரசு
x
தினத்தந்தி 5 Feb 2019 10:12 AM GMT (Updated: 5 Feb 2019 10:12 AM GMT)

நடப்பு நிதியாண்டில் ரூ.1.98 டிரில்லியன் அளவிலான மொத்த கூடுதல் செலவினத்திற்கு நாடாளுமன்ற ஒப்புதலை மத்திய அரசு கோரியுள்ளது.

புதுடெல்லி,

நாடாளுமன்ற மக்களவையில் மார்ச் வரையிலான நடப்பு நிதியாண்டின் மொத்த கூடுதல் செலவினத்திற்கான துணைநிலை மானிய கோரிக்கைகளை நிதி மந்திரி பியுஸ் கோயல் இன்று சமர்ப்பித்து உள்ளார்.

இதன்படி நிகர ரொக்க செலவினம் ரூ.51 ஆயிரத்து 433 கோடியே 28 லட்சம் அளவிற்கு தேவைப்படுகிறது.  இதேபோன்று மொத்த கூடுதல் செலவின தொகையானது ரூ.1 லட்சத்து 47 ஆயிரத்து 396 கோடியே 87 லட்சம் அளவிற்கு தேவைப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த தொகையானது அமைச்சகங்களால் சேமிக்கப்பட்ட அல்லது உயர் செலவின ரசீதுகளுக்காக தேவைப்படும் தொகைக்கு இணையாக இருக்கும்.

நிகர ரொக்க செலவினத்தில் இருந்து வேளாண் அமைச்சகத்திற்கு ரூ.19 ஆயிரத்து 481 கோடியும், சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகளுக்கான அமைச்சகத்திற்கு ரூ.4 ஆயிரத்து 840 கோடியே 75 லட்சமும் மற்றும் உள்விவகார துறை அமைச்சகத்திற்கு ரூ.4 ஆயிரத்து 700 கோடியும் தேவைப்படுகிறது என ஆவணத்தில் அரசு கேட்டு கொண்டுள்ளது.

Next Story