பாராளுமன்ற தேர்தல்: தமிழக தொகுதிகளில் ஒன்றில் பிரதமர் மோடி போட்டியிடுவாரா?


பாராளுமன்ற தேர்தல்: தமிழக தொகுதிகளில் ஒன்றில் பிரதமர் மோடி போட்டியிடுவாரா?
x
தினத்தந்தி 9 Feb 2019 5:32 AM GMT (Updated: 9 Feb 2019 5:32 AM GMT)

வரும் பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் மோடி போட்டியிட தமிழக தொகுதிகளில் ஒன்றை தேர்வு செய்ய இரண்டாவது வாய்ப்பு உள்ளதாக டிஎன்ஏ செய்தி வெளியிட்டு உள்ளது.

புதுடெல்லி

கடந்த சில வாரங்களாக, தேசிய தலைநகர் டெல்லியில் அரசியல்  வட்டாரங்கள்  2019 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக பிரதமர் நரேந்திர மோடி தனது இரண்டாவது இடமாக தமிழகத்தில் இருந்து ஒரு தொகுதியை தேர்வு செய்யலாம் என்ற யூகங்களைக் வெளியிட்டு  வருகின்றன. பா.ஜ.க தலைவர்கள் இதை அதிகாரபூர்வமாக  மறுத்துவிட்டாலும் பிரதமர் மோடி தமிழக தொகுதிகளில் போட்டியிடுவதற்கு வாய்ப்பு இருப்பதாகவே  கூறப்படுகிறது. இது ஒரு வலுவான சாத்தியம் என்றும் அது பல வழிகளில் பாரதீய ஜனதாவுக்கு  உதவ முடியும் என டிஎன்ஏ பத்திரிகை செய்தி வெளியிட்டு உள்ளது.

இந்தியாவின் வடக்குப் பகுதியில் பாரதீய ஜனதாவுக்கு குறையும் தொகுதிகளை ஈடுகட்டவும் கட்சிக்கு உதவுவதற்கும் இந்த முடிவை எடுக்கலாம் என கூறப்படுகிறது.

வேட்பாளராக மோடி மற்றும் கூட்டணிக் கட்சிகளுடன் போட்டியிடும் தேர்தலில், பா.ஜ.க. தமிழ்நாட்டில் 6 முதல் 12 இடங்களில்  வெற்றி பெற ஒரு நியாயமான வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் மோடி போட்டியிடுவது தேர்தலில் ஒரு  அலையை ஏற்படுத்தக்கூடும், மேலும் வட இந்தியாவில் ஏற்படும் கட்சியின் பாதிப்பிற்கு உதவும்.

தென்னிந்தியாவில் பாரதீய ஜனதா நிலை கொள்ள நீண்ட கால லட்சியம்  கொண்டு உள்ளது.

1991 வரை, வட இந்தியா மற்றும் தென்னிந்தியாவில் வலுவான  கட்சியாக இருப்பது காங்கிரசுக்கு சாதகமாவும் மத்தியில் ஆட்சி அமைக்கவும் உதவியது.

சமீபத்தில் நடைபெற்ற வீடியோ காணொலி நிகழ்ச்சியில் கூட பிரதமர் மோடிக்கு தமிழ்நாட்டின் மீது அதிக ஆர்வம் இருப்பது தெரியவந்தது.

பிரதமர் நரேந்திர மோடி தமிழக தொகுதியில் போட்டியிட விரும்பினால் பாரதீயஜனதா வலுவாக உள்ள கோவை, திருப்பூர், கன்னியாகுமரி  இந்த தொகுதிகளில் ஒன்றில் போட்டியிடலாம் என  அந்த பத்திரிகையில் செய்தி வெளியிடபட்டு உள்ளது. கடந்த பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பாரதீய ஜனதாவுக்கு 5.5 சதவீத ஓட்டுகள் கிடைத்தது.

அ.தி.மு.க., விஜயகாந்தின் தேமுதிக, பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் கொங்கு மக்கள்  தேசிய கட்சி ஆகியவற்றை உள்ளடக்கிய பாரதீய ஜனதா கூட்டணி மேற்கு மற்றும் வடக்கு தமிழ்நாடுகளில் அதிக தொகுதிகளை கைபற்ற வாய்ப்பு உள்ளதாக பாரதீய ஜனதா கட்சி தலைவர் ஒருவர் தெரிவித்து உள்ளார்.

Next Story