விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி செய்வதாக கூறிவிட்டு, தொழில் அதிபர்களுக்கு மோடி சலுகை காட்டினார்: ராகுல் காந்தி


விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி செய்வதாக கூறிவிட்டு, தொழில் அதிபர்களுக்கு மோடி சலுகை காட்டினார்: ராகுல் காந்தி
x
தினத்தந்தி 14 Feb 2019 9:47 AM GMT (Updated: 2019-02-14T15:17:19+05:30)

விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி செய்வதாக கூறிவிட்டு, தொழில் அதிபர்களுக்கு மோடி சலுகை காட்டியதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

ஆஜ்மிர்,

ராஜஸ்தான் மாநிலம் ஆஜ்மீரில் கட்சியினருடனான கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்தார். ராகுல் காந்தி கூறியதாவது:-  “விவசாய கடன்களை தள்ளுபடி செய்வதாக வெற்றி வாக்குறுதிகளை  மோடி வைத்தார். ஆனால், தனது தொழில் அதிபர் நண்பர்களின்  வங்கி கடனை ரத்து செய்தார். 

விவசாயிகள், சிறு குறு வியாபரிகள் என சமூகத்தின் அனைத்து தரப்பினரும் மோடி ஆட்சியின் கீழ் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும்.  ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சி அமைத்ததும் விவசாய கடன்களை தள்ளுபடி செய்தது. என்னையும் எனது குடும்பத்தினரையும் மோடி இழிவுபடுத்திய போதும் நான் பாராளுமன்றத்தில் அவரை அரவணைக்கவே செய்தேன். அன்பால் மட்டுமே வெறுப்புணர்வை வெல்ல முடியும்” என்றார். 


Next Story