மறக்கவும் மாட்டோம்; மன்னிக்கவும் மாட்டோம்! பயங்கரவாதிகளுக்கு சிஆர்பிஎப் சவால்

மறக்கவும் மாட்டோம்; மன்னிக்கவும் மாட்டோம் என்று பயங்கரவாதிகளுக்கு சிஆர்பிஎப் சவால் விடுத்துள்ளது.
புதுடெல்லி,
ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வமா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் சென்று கொண்டிருந்த வாகனத்தை குறிவைத்து ஜெய்ஷ் இ முகம்மது இயக்க பயங்கரவாதி நடத்திய கொடூர தாக்குதலில், 40 வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். படுகாயம் அடைந்த பல வீரர்கள் இன்னும் ஆபத்தான நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
புல்வமா தாக்குதல் நாடு முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாட்டின் பல்வேறு இடங்களில் புல்வமா தாக்குதலை கண்டித்தும் பாகிஸ்தானுக்கு எதிராகவும் போராட்டங்கள் நடைபெற்றுள்ளன.
இதையடுத்து பயங்கரவாத தாக்குதலை மறக்கவும் மாட்டோம், மன்னிக்கவும் மாட்டோம். இந்த கொடூர தாக்குதலுக்கு பழி தீர்க்கப்படும் என்றும் சிஆர்பிஎப் தெரிவித்துள்ளது.
புல்வாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு மரியாதை தெரிவித்து, அவர்களின் குடும்பத்திற்கு நாங்கள் துணை நிற்போம் என்று கூறியுள்ளது.
Related Tags :
Next Story