அமைச்சர்களுடன் சென்று துணை நிலை ஆளுநர் கிரண்பெடியை சந்திக்கிறார் முதல்-மந்திரி நாராயணசாமி


அமைச்சர்களுடன் சென்று துணை நிலை ஆளுநர் கிரண்பெடியை சந்திக்கிறார் முதல்-மந்திரி நாராயணசாமி
x
தினத்தந்தி 17 Feb 2019 12:10 PM GMT (Updated: 17 Feb 2019 12:10 PM GMT)

மாலை 6 மணிக்கு அமைச்சர்களுடன் சென்று துணை நிலை ஆளுநர் கிரண்பெடியுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக முதல்-மந்திரி நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

புதுவை,

புதுவையில் பொதுமக்களுக்கான திட்டங்களை கவர்னர் கிரண்பெடி தடுப்பதாக கூறியும், அவரை கண்டித்தும் முதல்-மந்திரி நாராயணசாமி, அமைச்சர்கள், 
எம்.எல்.ஏ.க்கள் மற்றும் காங்கிரஸ் கூட்டணி கட்சி தலைவர்கள் கவர்னர் மாளிகை முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களது போராட்டம் இன்று  5-வது நாளாக தர்ணாவில் ஈடுபட்டு வருகிறார். இதனையடுத்து பேச்சுவார்த்தைக்கு வருமாறு புதுச்சேரி முதல்-மந்திரி நாராயணசாமிக்கு, கிரண்பெடி அழைப்பு விடுத்த்தார்.

இந்தநிலையில் முதல்-மந்திரி நாராயணசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது:

ஆளுநர் அனுப்பிய கடிதம் கிடைத்தது. மாலை 6 மணிக்கு அமைச்சர்களுடன் ஆளுநரை சந்திக்கிறேன். கோப்புகள் தொடர்பாக துறை செயலாளர்கள், தலைமை செயலாளர் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் இடம்பெற்றால் மட்டுமே, துணைநிலை ஆளுநருடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story