புல்வாமா தாக்குதல்: உளவுத்துறை எச்சரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்காதது ஏன்? - மம்தா பானர்ஜி


புல்வாமா தாக்குதல்: உளவுத்துறை எச்சரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்காதது ஏன்? - மம்தா பானர்ஜி
x
தினத்தந்தி 18 Feb 2019 5:03 PM IST (Updated: 18 Feb 2019 5:03 PM IST)
t-max-icont-min-icon

புல்வாமா தாக்குதல் தொடர்பாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்காதது ஏன்? என மம்தா பானர்ஜி கேள்வி எழுப்பியுள்ளார்.

பிப்ரவரி 8-ம் தேதி சிஆர்பிஎப் உயர் அதிகாரிகளுக்கு மத்திய உளவுத்துறை கடிதம் எழுதியுள்ளது. அதில் “பள்ளத்தாக்கு பகுதிகளில் பயங்கரவாதிகள் சக்திவாய்ந்த வெடிகுண்டுகளை பயன்படுத்துவதற்கு வாய்ப்பு உள்ளது, கவனமாக நகர்வை மேற்கொள்ள கேட்டுக்கொண்டது" என தகவல்கள் வெளியாகியது. மேலும், என்ன வகையான தாக்குதல் நடத்தப்படலாம், இடம் மற்றும் தேதி குறித்த குறிப்பிட்ட விவரங்களை வழங்கவில்லை என குறிப்பிடப்பட்டது. உளவுத்துறை எச்சரிக்கை நிராகரிக்கப்பட்டது என குற்றம் சாட்டப்படுகிறது.

இந்நிலையில் மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி, புல்வாமா தாக்குதல் தொடர்பாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்காதது ஏன்? என கேள்வி எழுப்பியுள்ளார். 

“பிப்ரவரி 8-ம் தேதி உளவுத்துறையிடம் இருந்து உள்ளீடுகள் அரசுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. தேர்தலுக்கு முன்னதாக தாக்குதல் நடத்தப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? 78 வாகனங்கள் அனுமதிக்கப்பட்டது ஏன்? என கேள்வி எழுப்பியுள்ளார் மம்தா பானர்ஜி. மேலும், என்னுடைய செல்போன் உரையாடல்கள் ஒட்டுக்கேட்கப்படுகிறது என உளவுத்துறை தகவல்கள் எனக்கு கிடைத்துள்ளது, இது உங்களுக்கும் தெரியும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
1 More update

Next Story