பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா நாளை காலை சென்னை வருகிறார் என தகவல்


பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா நாளை காலை சென்னை வருகிறார் என தகவல்
x
தினத்தந்தி 18 Feb 2019 2:58 PM GMT (Updated: 2019-02-18T20:28:55+05:30)

பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா நாளை காலை சென்னை வருகிறார் என தகவல் வெளியாகியுள்ளது.பா.ஜனதா தலைவர் அமித்ஷா பிப்.22ம் தேதி ராமேசுவரத்துக்கு பிரசாரம் செய்ய வரவிருந்த நிலையில், இப்போது முன் கூட்டியே வருகிறார் என தகவல் வெளியாகியுள்ளது. 

தேர்தலில் அதிமுகவுடன் பா.ஜனதா கூட்டணி வைக்கிறது என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது என்றே தெரிகிறது. நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான தமிழக பா.ஜ.க. தேர்தல் பொறுப்பாளராக மத்திய ரெயில்வே துறை மந்திரி பியூஷ் கோயல் நியமிக்கப்பட்டு உள்ளார். அவர் ஏற்கனவே தமிழக அமைச்சர்களுடன் பேச்சுவார்த்தையை மேற்கொண்டார். இந்நிலையில் பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா நாளை காலை சென்னை வருகிறார் என தகவல் வெளியாகியுள்ளது. அதிமுகவுடன் மக்களவை தேர்தல் கூட்டணி பற்றி ஆலோசிக்க வருகிறார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

Next Story