கட்சியை வலுப்படுத்த எனக்கு உங்கள் ஆதரவு தேவை - தொண்டர்கள் மத்தியில் பிரியங்கா காந்தி பேச்சு

‘என்னிடம் இருந்து எந்த அற்புதத்தையும் எதிர்பார்க்காதீர்கள்’ என்று பிரியங்கா தொண்டர்கள் மத்தியில் பேசினார்.
புதுடெல்லி,
அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளராக (உத்தரபிரதேசம் கிழக்கு) நியமிக்கப்பட்டுள்ள பிரியங்கா காந்தி காங்கிரஸ் அலுவலகத்தில் வாக்குச்சாவடி அளவிலான அமைப்பு நிர்வாகிகள், தொண்டர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
அப்போது அவர், ‘‘நான் எனது சக்திக்கு அதிகமான அற்புதம் எதையும் செய்துவிட முடியாது. தொண்டர்கள் வாக்குச்சாவடி அளவில் கட்சியை பலப்படுத்த வேண்டும். இந்த மாநிலத்தில் கட்சியை வலுப்படுத்த எனக்கு உங்கள் ஆதரவு தேவை.
கட்சி விரோத நடவடிக்கைகளில் யாராவது ஈடுபடுவது தெரிந்தால் அவர்கள் கட்சியில் இருந்து நீக்கப்படுவார்கள்’’ என்று கூறியதாக தொண்டர்கள் தெரிவித்தனர். தொண்டர்கள் பிரியங்காவுக்கு ராணி லட்சுமிபாய் சிலை ஒன்றை பரிசளித்தனர்.
Related Tags :
Next Story