திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட உள்ளதாக தகவல்


திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட உள்ளதாக தகவல்
x
தினத்தந்தி 19 Feb 2019 7:26 AM GMT (Updated: 19 Feb 2019 9:37 AM GMT)

திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு 10 தொகுதிகள் வழங்கப்பட வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது

புதுடெல்லி

மக்களவைத் தேர்தலில் திமுக, காங்கிரஸ் கட்சி கூட்டணியில் தொகுதிப்பங்கீடு குறித்த பேச்சு டெல்லியில் நடந்து வருகிறது.

திமுக எம்.பி. கனிமொழி, தங்கள் கட்சியின் நிலைப்பாடு குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர்கள் அகமது படேல், முகுல் வாஸ்னிக் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார்.

காங்கிரஸ் கட்சியோ வரும் மக்களவைத் தேர்தலில் 15 தொகுதிகளை  திமுக தலைமையிடம் கேட்டுள்ளது. அதில் 14 தொகுதிகள் தமிழகத்திலும், புதுச்சேரியையும் காங்கிரஸ் கேட்கிறது. ஆனால், திமுக தலைமை காங்கிரஸ் கட்சிக்கு தமிழகத்தில்  9 இடங்களும் புதுச்சேரி ஒன்று என 10 இடங்கள் கொடுக்கலாம் என கூறப்படுகிறது.

திமுகவைப் பொறுத்தவரை தமிழகத்தில் 25 தொகுதிகளுக்கு குறைவில்லாமல் போட்டியிட வேண்டும் என்று விரும்புகிறது. மீதமுள்ள 15 தொகுதிகளைத்தான் மற்ற கட்சிகளுக்கு பகிர்ந்தளிக்கும் எனத் தெரிகிறது.

தமிழகத்தில் திமுக- காங்கிரஸ் கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், மதிமுக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், விடுதலை சிறுத்தைகள் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, கொங்கு கட்சி ஆகியவை இடம் பெறலாம் எனத் தெரிகிறது.

திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், மதிமுக ஆகிய கட்சிகளும் கணிசமான இடங்களைக் கேட்டுள்ளன.

Next Story