புல்வாமா தாக்குதல்: ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத தலைமை காஷ்மீரில் முழுவதுமாக அழிப்பு- இந்திய ராணுவம்


புல்வாமா தாக்குதல்: ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத தலைமை காஷ்மீரில் முழுவதுமாக அழிப்பு- இந்திய ராணுவம்
x
தினத்தந்தி 19 Feb 2019 8:14 AM GMT (Updated: 2019-02-19T13:44:39+05:30)

புல்வாமா தாக்குதலுக்கு காரணமான ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத தலைமை காஷ்மீரில் முழுவதுமாக அழிக்கப்பட்டது என இந்திய ராணுவம் தெரிவித்து உள்ளது.

புதுடெல்லி

புல்வாமா தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பாகிஸ்தான் பயங்கரவாத தளபதி உள்பட 3 பயங்கரவாதிகள் காஷ்மீரில் நடந்த  என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டனர். சுமார் 16 மணி நேரம் நடந்த இந்த சண்டையில் ஜெய்ஷ்-இ- முகமது இயக்க மூத்த தளபதி கம்ரான் உள்பட 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

சரணடையுங்கள், அல்லது நீங்கள் கொலை செய்யப்படுவீர்கள் என புல்வாமா என்கவுண்டருக்கு பிறகு இந்திய இராணுவம் பயங்கரவாதிகளை எச்சரித்து உள்ளது.

புல்வாமா தாக்குதலுக்கு காரணமான ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத தலைமை காஷ்மீரில் முழுவதுமாக அழிக்கப்பட்டது. 100 மணி நேரத்தில் பழி தீர்த்துவிட்டதாகவும் இந்திய ராணுவம் அறிவித்து உள்ளது.

Next Story