துணை ராணுவம் மீதான தாக்குதலை தடுத்து நிறுத்தாதது ஏன்? - சிவசேனா கேள்வி


துணை ராணுவம் மீதான தாக்குதலை தடுத்து நிறுத்தாதது ஏன்? - சிவசேனா கேள்வி
x
தினத்தந்தி 19 Feb 2019 9:30 PM GMT (Updated: 2019-02-20T01:27:28+05:30)

துணை ராணுவம் மீதான தாக்குதலை தடுத்து நிறுத்தாதது ஏன் என சிவசேனா கேள்வி எழுப்பி உள்ளது.

மும்பை,

சிவசேனா கட்சியின் அதிகாரபூர்வ பத்திரிகையான சாம்னாவில் நேற்று வெளியான தலையங்கம் பா.ஜனதாவை மீண்டும் தாக்கி வெளியிடப்பட்டு இருந்தது.

அதில், பிரதமர் மோடி தேர்தலில் வெற்றி பெறுவதற்காக சிறிய அளவிலான போரில் ஈடுபட வாய்ப்புள்ளதாக சிறிது காலத்துக்கு முன்பு தகவல்கள் கசிந்தன. பிரதமர் மோடியின் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் இ-மெயிலை கண்டறிந்த நமது உளவுத்துறை, துணை ராணுவம் மீதான பயங்கரவாத தாக்குதலை தடுத்து நிறுத்துவதில் தோல்வி அடைந்தது ஏன்? என கூறப்பட்டு இருந்தது.

Next Story