புல்வாமா தாக்குதலுக்கு பிறகு மோடி என்ன செய்தார்? கிண்டலடித்து புகைப்படம் வெளியிட்ட கொல்கத்தா பத்திரிக்கை


புல்வாமா தாக்குதலுக்கு பிறகு மோடி என்ன செய்தார்? கிண்டலடித்து புகைப்படம் வெளியிட்ட கொல்கத்தா பத்திரிக்கை
x
தினத்தந்தி 23 Feb 2019 6:14 AM GMT (Updated: 23 Feb 2019 6:14 AM GMT)

புல்வாமா தாக்குதலுக்கு பிறகு மோடி என்ன செய்தார்? கிண்டலடித்து கொல்கத்தா பத்திரிக்கை புகைப்படம் வெளியிட்டு உள்ளது அது தற்போது வைரலாகி உள்ளது.

கொல்கத்தா

பிப்ரவரி 14-ம் தேதி பிற்பகல் 3.10 மணியளவில் பயங்கரவாத தாக்குதல் புல்வாமாவில் நடைபெற்றது, ஆனால் பிரதமர் மோடி தன்னுடைய சுயவிளம்பரத்திற்காக ஆவணப்பட படப்பிடிப்பில் மிகவும் பிஸியாக இருந்தார் என காங்கிரஸ் குற்றம் சாட்டியது.

தன்னை மிகப்பெரிய தேசப்பற்றாளர் என அடையாளம் காட்டும் பிரதமர் மோடி ஆவணப் படத்திற்காக ராம்நகரில் உள்ள கார்பெட் பூங்காவில்  படப்பிடிப்பில் மிகவும் பிஸியாக இருந்துள்ளார். பிரதமர் மோடி பா.ஜனதாவினர் கோஷங்கள் முழங்க, கேமராக்களுடன் படகு சவாரியை மேற்கொண்டுள்ளார் என கூறியது.

இந்நிலையில் கொல்கத்தாவில் இயங்கி வரும் 'தி டெலிகிராப்' என்ற பத்திரிக்கை மோடியை விமர்சித்து தனது முதல் பக்கத்தில் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில், 'ஆன்டி இந்தியர்களே உங்களை நினைத்தால் வெட்கமாக இருக்கிறது. புல்வாமா தாக்குதலுக்காக பிரதமர் வருத்தப்படவில்லை என நீங்கள் எவ்வாறு கூறலாம். பிப்ரவரி 14 முதல் தினமும் பிரதமர் மோடி கருப்பு நிறமுள்ள உடைகளையே அணிந்து வருகிறார்'  என கிண்டலடித்து உள்ளது. அதற்கு கீழே பிரதமர் மோடி, அதன் பின் பங்கேற்ற விழாக்களில் சிரித்து கொண்டிருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளது. அதில் பிப்ரவரி 15 ஆம் தேதி பிரதமர் அதிவேக ரயிலை தொடங்கி வைத்த விழாவிலிருந்து, கொரியாவில் நிகழ்ச்சியில் பங்கேற்ற புகைப்படங்கள் வரை பிரதமர் மோடி சிரித்தவாறு இருக்கும் புகைப்படங்கள் அச்சிடப்பட்டுள்ளது.

மேலும் இந்த செய்தியை சிறப்பு கட்டுரையாகவும் தனது வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளது . இந்த விவகாரத்தில் அந்த பத்திரிக்கைக்கு ஆதரவும், எதிர்ப்பும் சமூகவலைதளங்களில் எழுந்து வருகின்றன.    

Next Story