ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் அத்துமீறி தாக்குதல்


ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் அத்துமீறி தாக்குதல்
x
தினத்தந்தி 23 Feb 2019 3:36 PM GMT (Updated: 2019-02-23T21:17:17+05:30)

ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் அத்துமீறி தாக்குதல் நடத்தி உள்ளது.

ஸ்ரீநகர்,

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ராஜோரி மாவட்டம் நவ்ஷேரா செக்டர் காணம் பகுதியில் உள்ள இந்திய கண்காணிப்பு சாவடிகளின் மீது இன்று மாலை 4.30 மணி அளவில் பாகிஸ்தான் ராணுவத்தினர் திடீரென்று துப்பாக்கிகளால் சுட்டு தாக்குதல் நடத்தினர். பதிலுக்கு இந்திய வீரர்களும் தகுந்த பதிலடி கொடுத்து அவர்களை விரட்டி அடித்தனர். 

இந்தியா- பாகிஸ்தான் இடையே  2003-ஆம் ஆண்டு போடப்பட்டுள்ள போர் நிறுத்த ஒப்பந்தத்தை பாகிஸ்தான் தொடர்ந்து அத்துமீறி வருவது குறிப்பிடத்தக்கது.

ஆக்கிரமிப்பு நோக்கத்திலோ அல்லது விபரீதமாகவோ இந்தியா ஏதாவது நடவடிக்கை மேற்கொண்டால் தக்க பதிலடி கொடுக்குமாறு பாகிஸ்தான் ராணுவத்துக்கு அந்த நாட்டின் பிரதமர் இம்ரான் கான் கட்டளையிட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story