காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி துப்பாக்கி சூடு; ஒருவர் காயம்


காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி துப்பாக்கி சூடு; ஒருவர் காயம்
x
தினத்தந்தி 1 March 2019 9:11 AM IST (Updated: 1 March 2019 9:11 AM IST)
t-max-icont-min-icon

காஷ்மீரின் வடக்கே இந்திய முகாம்கள் மீது பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி துப்பாக்கி சூடு நடத்தியதில் ஒருவர் காயமடைந்து உள்ளார்.

ஸ்ரீநகர்,

காஷ்மீரின் வடக்கே பாராமுல்லா மாவட்டத்தில் உரி பகுதியில் இந்திய படையினரின் முகாம்கள் மற்றும் பொதுமக்கள் வசித்து வரும் பகுதிகளை நோக்கி போர்நிறுத்த ஒப்பந்தத்தினை மீறி பாகிஸ்தான் படை இன்று துப்பாக்கி சூடு நடத்தியது.

அவர்கள் எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் சிறு பீரங்கிகள் மற்றும் ஆயுதங்களை கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளனர்.  இதற்கு இந்திய தரப்பும் பதிலடி கொடுத்தது.  இந்த சம்பவத்தில் பொதுமக்களில் ஒருவர் காயமடைந்து உள்ளார்.

கடந்த பிப்ரவரி 26ந்தேதி பாலகோட் பகுதியில் தீவிரவாத முகாம்கள் மீது இந்திய விமான படை தாக்குதல் நடத்தியது.  இதில் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதிகள் 350 பேர் பலியாகினர்.  இதனை தொடர்ந்து போர்நிறுத்த ஒப்பந்த விதிகளைமீறி பாகிஸ்தான் தாக்குதல் நடத்தி வருகிறது.  இன்று 3வது முறையாக அத்துமீறி தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது.

Next Story