தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு மம்தா பானர்ஜி பிறந்த நாள் வாழ்த்து
தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு மம்தா பானர்ஜி பிறந்த நாள் வாழ்த்துகள் தெரிவித்து உள்ளார்.
சென்னை,
தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலினின் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி பிறந்த நாள் வாழ்த்துகளை டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள செய்தியில், மு.க. ஸ்டாலின்ஜிக்கு பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். உடல் ஆரோக்கியம் மற்றும் மகிழ்ச்சியுடன் இருக்க வாழ்த்துகிறேன் என தெரிவித்து உள்ளார்.
இதேபோன்று ஆர்ய சமாஜத்தினை நிறுவிய தயானந்த சரஸ்வதி சுவாமிகளின் பிறந்த நாளை முன்னிட்டும், மேற்கு வங்காளத்தின் முன்னாள் முதல் மந்திரி புத்ததேப் பட்டாசார்ஜியின் பிறந்த நாளை முன்னிட்டும் டுவிட்டர் வழியே தனது வாழ்த்துகளை மம்தா பானர்ஜி தெரிவித்து உள்ளார்.
Wishing @mkstalin Ji a very happy birthday. Wish you good health and happiness
— Mamata Banerjee (@MamataOfficial) March 1, 2019
Related Tags :
Next Story