தேசிய செய்திகள்

காஷ்மீரில் துப்பாக்கி சண்டை; 2 தீவிரவாதிகள் சுட்டு கொலை, 5 வீரர்கள் பலி + "||" + Handwara encounter: 2 terrorists killed, Five security personnel have lost their lives

காஷ்மீரில் துப்பாக்கி சண்டை; 2 தீவிரவாதிகள் சுட்டு கொலை, 5 வீரர்கள் பலி

காஷ்மீரில் துப்பாக்கி சண்டை; 2 தீவிரவாதிகள் சுட்டு கொலை, 5 வீரர்கள் பலி
காஷ்மீரில் நடந்து வரும் துப்பாக்கி சண்டையில் 2 தீவிரவாதிகள் மற்றும் 5 வீரர்கள் பலியாகி உள்ளனர்.
காஷ்மீர்,

காஷ்மீரின் பாபாகண்ட் நகரில் ஹந்த்வாரா பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி உள்ளனர் என பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது.  இதனை தொடர்ந்து அங்கு சென்ற வீரர்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.

இதற்கு பதிலடியாக வீரர்கள் துப்பாக்கி சூடு நடத்தினர்.  தீவிரவாதிகளுடன் தொடர்ந்து 3வது நாளாக சண்டை நடந்து வரும் நிலையில், இன்று, மத்திய ரிசர்வ் போலீசார் 2 பேர் மற்றும் ஜம்மு மற்றும் காஷ்மீரின் 2 போலீஸ் அதிகாரிகள் கொல்லப்பட்டு உள்ளனர் என முதற்கட்ட தகவல் வெளியானது.  தொடர்ந்து துப்பாக்கி சூடு நடந்தது.

இதில், 2 தீவிரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர்.  இந்திய தரப்பில் மொத்தம் 5 வீரர்கள் பலியாகி உள்ளனர்.  துப்பாக்கி சூடு தொடர்ந்து நடந்து வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. ஆப்கானிஸ்தானில் ராணுவ வேட்டை; 2 தலீபான் தலைவர்கள் உள்பட 52 தீவிரவாதிகள் பலி
ஆப்கானிஸ்தானில் 2 தலீபான் தலைவர்கள் உள்பட 52 தீவிரவாதிகள் கொல்லப்பட்டு உள்ளனர்.
2. இலங்கை போலீசாருடன் துப்பாக்கி சண்டையில் ஈடுபட்ட 3 பேர் எங்கள் அமைப்பினர்; ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு
இலங்கை போலீசாருடன் துப்பாக்கி சண்டையில் ஈடுபட்ட 3 பேர் எங்கள் அமைப்பினர் என ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு தெரிவித்துள்ளது.
3. இலங்கையில் தீவிரவாதிகள் தாக்குதல் எதிரொலி: ஊட்டி தங்கும் விடுதிகளில் போலீசார் சோதனை
இலங்கையில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதின் எதிரொலியாக ஊட்டியில் உள்ள தங்கும் விடுதிகளில் போலீசார் விடிய, விடிய சோதனை நடத்தினர்.
4. காஷ்மீரில் பாதுகாப்பு படை அதிரடியில் 2 தீவிரவாதிகள் சுட்டு கொலை
காஷ்மீரில் பாதுகாப்பு படையினரின் அதிரடி சண்டையில் 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.
5. காஷ்மீரில் நடந்த என்கவுண்டரில் 2 தீவிரவாதிகள் சுட்டு கொலை
ஜம்மு மற்றும் காஷ்மீரில் பத்காம் பகுதியில் நடந்த என்கவுண்டரில் 2 தீவிரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர்.