12 வயது சிறுவனால் பலாத்காரம் செய்யப்பட்ட 10 வயது சிறுமி கர்ப்பம், போலீஸ் விசாரணை
மராட்டியத்தில் 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தது தொடர்பாக போலீஸ் விசாரணையை மேற்கொண்டு வருகிறது.
பால்கார் மாவட்டம் மோகாடா காவல் நிலையத்திற்கு உள்பட்ட கிராமத்தை சேர்ந்த 10 வயது சிறுமி வயிறு வலிப்பதாக பெற்றோர்களிடம் கூறியுள்ளார். உடனடியாக சிறுமியை பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். பரிசோதனை செய்த போது சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து பெற்றோர் சிறுமியிடம் நடந்தது தொடர்பாக விசாரணையை மேற்கொண்டனர். அப்போது பக்கத்து வீட்டு 12 வயது சிறுவன் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக கூறியுள்ளார். இதனையடுத்து அவர்கள் போலீசில் புகார் தெரிவித்துள்ளனர். போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
சிறுவனை கைது செய்யவில்லை. விசாரணை தொடர்கிறது என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story