தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய புல்வாமாவில் குண்டு வெடிப்பு
தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய புல்வாமாவில் குண்டு வெடிப்பு சம்பவம் நடந்துள்ளது.
ஸ்ரீநகர்,
காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் அவந்திப்போரா என்ற இடத்தில் நேற்று மாலை குண்டு வெடித்தது. இந்த சம்பவத்தில் உயிர் இழப்போ, பொருட்சேதமோ ஏற்படவில்லை என அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து அந்த பகுதியில் போலீசார் உஷார்படுத்தப்பட்டு உள்ளனர். இந்த சம்பவத்தின் உண்மை நிலை தொடர்பாக போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
இந்த மாவட்டத்தில் தான் சமீபத்தில் தீவிரவாதிகள் நடத்திய கார் குண்டு தாக்குதலில் 40 துணை ராணுவத்தினர் பலியானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story