புல்வாமா பயங்கரவாத தாக்குதல் ஒரு விபத்து: திக் விஜய்சிங் கருத்தால் சர்ச்சை
புல்வாமா பயங்கரவாத தாக்குதல் ஒரு விபத்து என்று காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான திக் விஜய்சிங் கூறியதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
புதுடெல்லி,
காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவர் திக் விஜய்சிங். சர்ச்சை கருத்துகளால் அவ்வப்போது காங்கிரஸ் கட்சியை தர்மசங்கடமான நிலைக்கு தள்ளும் திக் விஜய்சிங், தற்போது புல்வாமா தாக்குதல் குறித்த அவர் வெளியிட்ட கருத்து அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. புல்வாமா தாக்குதல் ஒரு விபத்து என திக் விஜய் சிங் தெரிவித்துள்ளார்.
தனது டுவிட்டரில் திக் விஜய்சிங் வெளியிட்டுள்ள பதிவில், “ புல்வாமா விபத்துக்கு பிறகு, இந்திய விமானப்படை நடத்திய தாக்குதலை வெளிநாட்டு ஊடகங்கள் கேள்விக்குள்ளாக்குகின்றன. இந்திய அரசாங்கத்தால், இந்த விஷயத்தில் நம்பிக்கைக்கு பற்றாக்குறை ஏற்பட்டது” என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக, பாலகோட்டில் இந்திய விமானப்படை நடத்திய தாக்குதலுக்கு ஆதாரம் அளிக்க வேண்டும் என்று திக் விஜய் சிங் கூறி, விமர்சனத்துக்குள்ளானர்.
Related Tags :
Next Story