பசுமை பட்டாசுகள் தயாரிப்பு; அறிக்கை தாக்கல் செய்ய நீரி அமைப்புக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு


பசுமை பட்டாசுகள் தயாரிப்பு; அறிக்கை தாக்கல் செய்ய நீரி அமைப்புக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 5 March 2019 5:01 PM IST (Updated: 5 March 2019 5:01 PM IST)
t-max-icont-min-icon

பசுமை பட்டாசுகளை தயாரிப்பது பற்றி மார்ச் 12க்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமென நீரி அமைப்புக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.

புதுடெல்லி,

பசுமை பட்டாசுகள் குறித்து உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது.  இந்த மனுக்களை நீதிபதி கன்வில்கர் தலைமையிலான அமர்வு விசாரணை மேற்கொண்டது.

விசாரணையின் முடிவில் பசுமை பட்டாசுகளை தயாரிப்பது எப்படி, பொட்டாசியம் இல்லாமல் பட்டாசு தயாரிப்பது எப்படி என்பது தொடர்பான வழிமுறைகளை மார்ச் 12ந்தேதிக்குள் அறிக்கையாக தாக்கல் செய்ய நீரி அமைப்புக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் அந்த அறிக்கையின் நகலை உற்பத்தியாளர்கள் மற்றும் மனுதாரருக்கு வழங்க வேண்டும் என நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Next Story